பிக் பாஸ் தமிழ் சீசனில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்றத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் வைல்ட் கார்டு போட்டியாளர் எலிமினேட் ஆகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் இந்த முறைதான் முதல் முறையாக ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். அதில் முதல் போட்டியாளராக அன்ன பாரதி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த கானா பாலா குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரமே பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஐஷூ வெளியேறினார்.
வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா, தினேஷ் இருவர் மட்டுமே உள்ளே ஆக்டிவாக உள்ளனர். மற்ற வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பெரிதாக மக்களை கவரவில்லை. அந்த வகையில் பாடகர் கானா பாலா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...