ரஜினிதான் ராகவேந்திரா சுவாமி... அதிரடி கிளப்பிய ராகவா லாரன்ஸ்!


ராகவா லாரன்ஸ்...

நடிகர் ரஜினிகாந்தைதான் ராகவேந்திரா சுவாமியாக நினைத்துள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசியுள்ளார்.

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டப் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, “இந்தப் படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. என் உள் மனது சொன்ன மாதிரி இந்த படத்தின் நாயகன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய‌ உள்ளது. சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள்.

நிறைய பேர் இந்த படத்தைப் பாராட்டி உள்ளனர். என்னுடைய‌ குரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை. ரஜினிகாந்த் அவர்களை என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமியாக‌ நினைக்கிறேன். என் அம்மா பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

x