அதனால் தான் என் மனைவியை பாய்கட் பண்ணச் சொன்னேன்; விளக்கம் சொல்லும் கருணாஸ்!


கருணாஸ்- கிரேஸ்

நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் தனது மனைவி கிரேஸை பாய்கட் பண்ணச் சொன்னது நான்தான் என்ற உண்மையை இப்போது சொல்லி இருக்கிறார். இதற்காக அவர் சொன்ன காரணம்தான் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ்- கிரேஸ்

நடிகர் சூர்யாவின் ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். இதற்குப் பின்பு, ‘பொல்லாதவன்’, ‘பாபா’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தினார். இதுமட்டுமல்லாது, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

அரசியலிலும் ஆர்வம் காட்டும் கருணாஸ் ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவருக்கும் பின்னணிப் பாடகி கிரேஸ் என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து மகளும் மகனும் உள்ளனர். மகன் கென் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் கருணாஸ்

இந்த நிலையில், கருணாஸும் கிரேஸும் ஜோடியாக கொடுத்த பேட்டி ஒன்றில் கிரேஸை பாய்கட் பண்ணச் சொல்லிச் சொன்னது நான்தான் என்ற தகவலை சொல்லி இருக்கிறார் கருணாஸ். “எனது மனைவி கிரேஸ் பாய்கட் லுக்கில் எப்போதும் இருப்பதற்கு காரணமே நான் தான். திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு நீளமான முடி இருந்தது. ஆனால் நான் தான் வெட்டிவிடச் சொன்னேன்.

பாய்கட் செய்தால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும். அதனால் தான் நான் அவரது தலைமுடியை வெட்டிவிட்டேன்” என மனைவியை பாய்கட் பண்ணச் சொன்னதற்கான காரணமாக கருணாஸ் சொல்லி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

x