‘அப்பத்தா’ நேரடி ஓடிடி வெளியீடு; ஊர்வசியின் 700வது திரைப்படத்தை இன்று முதல் இலவசமாக காணலாம்


அப்பத்தா

ஊர்வசி நடிப்பில் அவரது 700வது திரைப்படமான ‘அப்பத்தா’, இன்று(ஜூலை 29) நேரடி ஓடிடி வெளியீடாக களம் கண்டுள்ளது.

ஊர்வசி நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம் ’அப்பத்தா’. 1993ல் வெளியான ’மிதுனம்’ திரைப்படத்துக்கு அப்பால் 30 வருடங்கள் கழித்து மீண்டும் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி நடித்துள்ளார்.

இயக்குநர் பிரியதர்ஷன் உடன் ’அப்பத்தா’ ஊர்வசி

கண்ணம்மா என்ற மூதாட்டி ஊரில் அனைவராலும் ’அப்பத்தா’வாக விளிக்கப்படுகிறார். அந்த வயதிலும் சுயமாக தனது காலில் நிற்கும் அப்பத்தா, ஊறுகாய் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார். அதனை விரும்பாத அவரது மகன், தாயை வற்புறுத்தி சென்னைக்கு அழைத்து செல்கிறான்.

அங்கே மகன் குடும்பத்தினர் சுற்றுலாவுக்கு கிளம்ப, வீட்டு வளர்ப்பு நாயை பராமரிக்கும் பொறுப்பு அப்பத்தா தலையில் விழுகிறது. நாய் என்றாலே காத தூரம் ஓடும் அப்பத்தாவுக்கும் அந்த நாய்க்கும் இடையே கலாட்டாவும், உருக்கமுமாக தொடங்கும் கதம்ப உறவு எங்கே போய் முடிகிறது என்பதே இந்த திரைப்படம். ’அப்பத்தா’ திரைப்படத்தை இன்று முதல் ’ஜியோ சினிமா’ ஓடிடி தளத்தில் இலவசமாக காணலாம்.

x