'இந்தியன்2’ படத்திற்காக உடல்ரீதியாக நிறைய கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்தேன் என நடிகை காஜல் அகர்வால் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். காஜல் எடுத்த ரிஸ்க் அனைத்திற்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலரும் நடித்திருக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. அடுத்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதில், `நாட்டில் நடக்கும் தவறுகளை இந்தியன் எங்கிருந்தாலும் தட்டிக் கேட்பான்' என்ற ஒன்லைனோடு இருந்த டீசர் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் நடிகை சுகன்யாவின் கதாபாத்திரத்தை இதில் நடிகை காஜல் ஏற்கிறார் என சொல்லப்படுகிறது.
ஆனால், சமீபத்தில் வெளியான டீசரில் கூட காஜலின் கதாபாத்திரம் காட்டப்படவில்லை. இந்தப் படத்திற்காக காஜல் களரி, குதிரை ஏற்றம் உள்ளிட்டப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, ”இந்தப் படத்திற்காக நான் களரி தற்காப்புகலை கற்றுக் கொண்டேன். அது உடல் ரீதியாக எனக்கு சவாலாக இருந்தது. உண்மையிலேயே அது ரொம்ப கஷ்டம். நிறைய வலிகளை சந்தித்தேன். ஆனால், முழுமையாக கற்றுக் கொண்ட பிறகு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...