ப்பா... ரசிகர்களை தெறிக்க விட்ட சமந்தா.. சிகிச்சைக்கு முன்பு தோழிகளுடன் ஜாலி சுற்றுலா!


சிகிச்சைக்கு முன்பாக சுற்றுலாவில் ரிலாக்ஸாகும் சமந்தா!

வெளிநாட்டிற்கு சிகிச்சை செல்வதற்கு முன்பாக நடிகை சமந்தா சுற்றுலாவில் தீவிரம் காட்டி வருகிறார்.

மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா கைவசம் இருந்த ‘சாகுந்தலம்’, ‘குஷி’, ‘சிட்டாடல்’ படங்களை முடித்து விட்டு சினிமாவுக்கு சிறிது காலம் பிரேக் என்ற முடிவை அறிவித்தார். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘சிட்டாடல்’ மற்றும் ‘குஷி’ படங்களை முடித்தவர் சொன்னபடி சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். முதலில் வேலூர் பொற்கோவில், ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் வழிபாடு, கோவை ஈஷா மையம் என ஆன்மிக சுற்றுலாவில் கவனம் செலுத்திய சமந்தா தற்போது இருப்பது பாலி நாட்டில்.

தனது தோழிகளுடன் பாலிக்கு சுற்றுலா சென்றுள்ள சமந்தா, இது போன்ற இடத்தில் காலை பொழுதை செலவழிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

மையோசிடிஸ் நோய்க்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சமந்தா செல்ல இருப்பதற்கு முன்பு சுற்றுலாவில் ரிலாக்ஸ் ஆகிறார் என ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

x