நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு...விழுப்புரம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!


ராகவா லாரன்ஸ்

தன்னைச் சந்திக்க வந்தபோது ரசிகருக்கு நேர்ந்த அசம்பாவிதம் காரணமாக நடிகர் ராகவா லாரன்ஸ் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்...

பிரபலங்கள் தங்கள் ரசிகர்களைப் பொதுவெளியில் சந்திக்க செல்லும் போது அவர்கள் மீதுள்ள அன்பால் புகைப்படம் எடுக்க நெருங்கிச் செல்வார்கள். அப்போது கூடும் கூட்டத்தால், தள்ளுமுள்ளு, அடிதடி என பல அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. அப்படித்தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி2’ பட விழாவில் ஒரு சம்பவம் ஏற்பட்டது.

அதாவது, சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் காண சென்றிருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பவுன்சர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது எனக் கூறி நடிகர் ராகவா லாரன்ஸூம் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார். இதுபோல அவரைச் சந்திக்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் மாட்டி இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க அவர் எடுத்துள்ள முடிவு குறித்துத் தற்போது கூறியுள்ளார்.

அதில் ’என்னுடன் ரசிகர்கள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்காக ரசிகர் ஒருவர் பயணம் செய்து வந்தபோது, விபத்து நேர்ந்து அவர் வாழ்க்கையை இழந்துவிட்டார். இது வருத்ததிற்குரிய விஷயம். இதனைத் தவிர்க்க நான் ரசிகர்களைத் தேடி செல்ல முடிவு செய்திருக்கிறேன். இதற்காக அவர்களது நகரத்திற்கு நான் போகிறேன். அங்கே ரசிகர்களுடன் போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதை நாளை விழுப்புரத்தில் இருந்து தொடங்குகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


x