நடிகை சமந்தா பிகினி, பேக்லஸ் புகைப்படங்கள் என உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதற்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்க விட்டு வருகின்றனர்.
மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அதற்கான சிகிச்சையில் தற்போது உள்ளார். இந்த சிகிச்சைக்காகவே ஆறு மாத கால அளவில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஹைதராபாத் திரும்பியவர் தற்போது பூடானில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக சுற்றுலா சென்றுள்ளார். இதுமட்டுமல்லாது, பல பிராண்டுகளுக்கும் இவர் மாடலிங் செய்து வருகிறார்.
தனது துணி பிராண்டான சகிக்கு சமீபத்தில் புடவைக் கட்டி பாந்தமாக புகைப்படங்களை வெளியிட்டவர் தற்போது பேக்லெஸ், பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸை கொடுத்து வரும் அதே சமயம் சமந்தா மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து சமந்தா ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!