பிக் பாஸ் ரெட்கார்டு விவகாரம்; கமல்ஹாசன் மீது வழக்குத் தொடர்வேன்: வனிதா விஜயகுமார் ஆவேசம்!


ஜோவிகா-வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஜோவிகா மீதும் பலரும் நெகட்டிவிட்டி பரப்பி வரும் சமயத்தில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் பேச வேண்டும் என்றும், இல்லையென்றால் வழக்குத் தொடர்வேன் எனவும் வனிதா விஜயகுமார் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் இல்லத்தில் இருந்து பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. பிக் பாஸ் இல்லத்திற்கு வெளியேயும், உள்ளேயும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூதான் என்றும் பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

இதில் ஜோவிகாவும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்லி இருந்ததால் அவரையும் நெட்டிசன்கள் இணையத்தில் கேலி செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன்

மேலும், பிக் பாஸ் இல்லத்திற்கு பிரதீப்பைத் திரும்ப கொண்டு வரவேண்டும் எனவும் பிரதீப்புக்கு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து வனிதா விஜயகுமார், தனது மகள் ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ” பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என ஜோவிகா பேசவே இல்லை. ரெட் கார்டு கொடுத்ததற்காக காரணம் பற்றி கமல்ஹாசன் இந்த வாரம் விளக்க வேண்டும். இல்லையென்றால் நான் வழக்கு தொடருவேன். நான் இல்லாவிட்டாலும் கூட ஜோவிகாவுக்கு 18 வயதாகி விட்டது. அவள் வந்து வழக்குத் தொடர்வாள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x