[X] Close

'விஸ்வாசம்' படத்தில் அஜித் கேரக்டர் பெயர் தெரியுமா?


want-to-know-ajith-character-name-is-viswasam

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 17:55 pm
  • அ+ அ-

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இப்படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று ‘விஸ்வாசம்’ படத்தின் சில புகைப்படங்கள் கசிந்த நிலையில், தற்போது அஜித் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே (அஜய் குமார்) ஆகிய கேரக்டர்களில் நடித்தார் அஜித்.

‘விஸ்வாசம்’ படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால், எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் விரைவில் தெரியவரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close