[X] Close

ஷாருக் கானை கிண்டல் செய்வது அருவருப்பாக இருக்கிறது: குஷ்பூ ஆதரவு


kushboo-supports-srk

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Sep, 2018 16:00 pm
  • அ+ அ-

நடிகர் ஷாருக் கானை கிண்டல் செய்வது அருவருப்பாக இருக்கிறது என நடிகை குஷ்பூ ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

ஷாருக் கானின் மூன்றாவது மகன் ஆப்ராம், வீட்டில் விநாயகர் சிலையின் முன் வணங்குவதைப் போன்ற புகைப்படத்தை ஷாருக் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து பலரும் அவரது மதம் குறித்து கேள்வியெழுப்பி, முஸ்லிமாக இருந்து கொண்டு இப்படி செய்வது தவறு என்கிற ரீதியில் வெறுப்பை உமிழும் கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர். #SRKFansupset என்கிற ஹாஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ஷாருக் மீது வசைமொழிகள் வீசப்பட்டன. இந்நிலையில், நடிகை குஷ்பூ, ஷாருக் கானுக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

"இறைவன் ஒருவரே. நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இது கற்றுத்தரப்படவில்லையா? ஷாருக் கான் முஸ்லிமாக இருந்தால் என்ன? இறைவன் முஸ்லிம் இல்லை. இந்துக்கள் மட்டுமே தன்னை வணங்க வேண்டும் என்று கணபதி கூறியதில்லை. இறை சக்தியின் மேல் நம்பிக்கையிருந்தால், இறைவன் ஒருவனே என்பதை நம்புங்கள். ஷாருக் கானை கிண்டல் செய்வது அருவருப்பாக இருக்கிறது", என்று குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குஷ்பூ ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், ஆர்வம் காரணமாக, தனிப்பட்ட முறையில் பல விதமான விநாயகர் சிலைகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close