[X] Close

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்த நடிகர் சூர்யா


surya-meets-his-junior-fan

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Sep, 2018 15:36 pm
  • அ+ அ-

தசைவளக்கேடு என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அச்சிறுவனை சந்தித்து உரையாடியுள்ளார் நடிகர் சூர்யா.

தசைவளக்கேடு (Muscular Dystrophy) என்கிற நோய்க்கு சிகிச்சை கிடையாது. உடலின் தசைகளை வலுவிழக்கச்செய்து உடம்பின் ஒவ்வொரு முக்கிய அங்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கிவிடும் நோய் இது.

தேனியைச் சேர்ந்த பத்து வயது சிறுவனான தினேஷ் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஓவியம் வரைவதில் வல்லவரான தினேஷ், நடிகர் சூர்யாவின் ரசிகர். நடிகர் சூர்யாவை பார்த்து அவரது படத்தை வரையவேண்டும் என்பது தினேஷின் நீண்ட நாள் ஆசை. இவரது ஆசையப் பற்றி கேள்விப்பட்ட தேனி சூர்யா ரசிகர் மன்றத்தினர், தினேஷின் ஆசையை நிறைவேற்ற முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

தினேஷை சந்தித்த நடிகர் சூர்யா, அவருடன் நேரம் செலவிட்டு, பேசி, உற்சாகப்படுத்தினார். "அடிமனதில் என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடந்துவிடும். பார். இப்போது நீ நினைத்தது நடந்துவிட்டது. அடுத்தும் இதே போல உண்மையாக நினைத்துக் கொள். அது கண்டிப்பாக நடக்கும்" என தினேஷிடம் சூர்யா உரையாடினார்.

சூர்யா, சிறுவன் தினேஷை சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close