[X] Close

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக் கான்: மதத்தை வைத்து வெறுப்பை உமிழும் கருத்துகள்


sharukh-instagram-picture-controversy

இன்ஸ்டாகிராமில் ஷாரூக் கான் பகிர்ந்துள்ள படம் (இடது)

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Sep, 2018 14:13 pm
  • அ+ அ-

நடிகர் ஷாருக் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

நடிகர் ஷாருக் கான் மனைவி கவுரி கான் ஒரு இந்து. ஷாருக் கான் தனது மகனுக்கு ஆர்யன் என்றும், மகளுக்கு சுஹானா என்றும் பெயரிட்டார். மூன்றாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த கான் தம்பதியனர் அந்த குழந்தைக்கு ஆப்’ராம்’ என்று பெயரிட்டனர். ஷாருக் வீட்டிலும் அவரது குழந்தைகள் இரண்டு மத சம்பிரதாயங்களையும் பின்பற்றுகின்றனர். இஸ்லாமில் நம்பிக்கைக் கொண்டவரான ஷாருக் அதே நேரத்தில் தன் மனைவியின் மதத்தையும் மதிப்பதாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஷாருக் கானின் மூன்றாவது மகன் ஆப்ராம், வீட்டில் விநாயகர் சிலையின் முன் வணங்குவதைப் போன்ற புகைப்படத்தை ஷாருக் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பலரும் அவரது மதம் குறித்து கேள்வியெழுப்பி, வெறுப்பை உமிழும் கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர்.

"இது தவறு, நீங்கள் ஒரு முஸ்லிம், ஏன் கணபதி நாளை கொண்டாடுகிறீர்கள்" என்று ஒருவர் கேட்க, இன்னொருவரோ, "அல்லாவின் ஆணையை மதிக்காமல், குரானை படித்துவிட்டு சிலைகளை வணங்கினால், இவ்வளவு பணமும், புகழும் இருந்து என்ன பிரயோஜனம்" என்கிற ரீதியில் கேள்வி கேட்டிருக்கிறார். "நீங்கள் இந்துவா, அல்லது முஸ்லிமா எனக்குக் குழப்பமாக இருக்கிறது" என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் ஒருவர்.

ஷாருக்கை வசைபாடும் எண்ணற்ற கருத்துக்களுக்கு மத்தியில், 'ஷாருக் உண்மையான மனிதர்', 'அனைத்து மதங்களையும் மதிப்பவர்', 'அவர்தான் உண்மையான முஸ்லிம்' என ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்தும் நிறைய கருத்துகள் போடப்பட்டு வருகின்றன. இப்படியாக இந்த புகைப்படத்தின் கீழ் மத ரீதியாக பெரிய கருத்து மோதலே நடந்து கொண்டிருக்கிறது.

தன் இளைய மகன் இருக்கும் அழகான ஒரு புகைப்படம் இப்படியான வெறுப்பை சம்பாதிக்கும் என ஷாருக் கண்டிப்பாக நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Our Ganpati ‘Pappa’ is home, as the lil one calls him.

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close