[X] Close

செப்.24-ல் ‘சர்கார்’ முதல் பாடல் வெளியீடு


sarkar-first-song-releases-on-september-24

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 12:24 pm
  • அ+ அ-

செப்டம்பர் 24-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, யோகிபாபு, வரலெட்சுமி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். விவேக் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

தீபாவளி வெளியீடு என்பதால் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக இப்படத்தின் முதல் பாடலை செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close