விஜயகுமார் பேத்தியின் கோலாகல திருமணம்... ரஜினி முதல் மீனா வரை படையெடுத்து வாழ்த்திய பிரபலங்கள்!


விஜயகுமார் பேத்தி திருமணத்தில்...

நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சிநேகா, மீனா என ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்...

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜயகுமார் பேத்தி தியா திருமண நிகழ்வுகள்தான் இணையத்தில் அதிகம் கண்ணில் படுகிறது. பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள், கண்ணைப் பறிக்கும் வண்ண உடைகள், அகம் நிறைய மகிழ்ச்சி என விஜயகுமார் குடும்பம் தியாவின் திருமண நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். பந்தக்கால் நடுவது, கடற்கரையில் மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத், ஹல்தி ஃபங்க்‌ஷன் என கடந்த ஒரு வாரமாக இந்தத் திருமண நிகழ்வு களைக்கட்டியது.

நடிகர் விஜயகுமார் மற்றும் அவரின் முதல் மனைவியான முத்துகண்ணுவிற்கு பிறந்த மூத்தமகள் கவிதா மற்றும் இரண்டாவது மகள் அனிதா இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். அருண்விஜய் இவர்களின் சகோதரர் ஆவார். அனிதா-கோகுல் தம்பதியருக்கு மகன் ஸ்ரீஜெய், தியா என இரண்டு பிள்ளைகள். இதில் தியா அம்மாவைப் போலவே மருத்துவராக வேண்டி வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இவருக்குதான் இன்று திலன் என்பவருடன் காதல் திருமணம் மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு ரெசாட்டில் நடந்துள்ளது.

கடந்த வருடத்தில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. திரும்ணத்திற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரனுடன் நடிகர்கள் ரஜினி, சூர்யா, தனுஷ் என கோலிவுட் பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில், திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதுபோலவே, நடிகைகள் மீனா, சிநேகா உள்ளிட்ட ஏராளமானத் திரைப்பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்: நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி; கோவையில் கலைஞர் நூலகம்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

x