பிரபல சின்னத்திரை நடிகைக்குத் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!


ஹர்திகா

’கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஹர்திகாவுக்குத் தற்போது திருமணம் முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹர்திகா திருமணம்

’செம்பருத்தி’ சீரியலுக்குப் பிறகு நடிகர் கார்த்திக் ராஜ் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். இதில் தீபா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஹர்திகா நடித்து வருகிறார்.

ஹர்திகா திருமணம்

நிறம் என்பதைத் தாண்டி நிறமும் குணமும்தான் முக்கியம் என்பதை புரிய வைத்து கதாநாயகனுடன் எப்படி சேர்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதைக்களம்.

ஹர்திகா

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வரும் நிலையில் ஹர்திகாவுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஹர்திகா

தனது வாழ்வின் சிறந்த தருணங்கள் எனச் சொல்லி இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திகா.

ஹர்திகா

மாப்பிள்ளை கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இவரின் திருமணம் அவரின் குடும்ப வழக்கப்படி நடந்து முடிந்துள்ளது. ஆனால், மாப்பிள்ளை குறித்தான விவரங்களை ஹர்திகா எதுவும் வெளிப்படையாகப் பகிரவில்லை.

ஹர்திகா

ஹர்திகாவுக்கும் அவரது கணவருக்கும் ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

x