விஜய் அழைத்தால் வீட்டுக்கு 'ஓகே'... அரசியலுக்கு 'நோ' தான்..! - ஜெயம்ரவி ஓபன் டாக்


நடிகர் ஜெயம் ரவி

"நடிகர் விஜய் கூப்பிட்டால் வீட்டுக்கு வேண்டுமானால் போகலாம். அரசியலுக்கு செல்ல மாட்டேன்" என்று, நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த விஷயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ’சைரன்’. இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் ஜெயம் ரவி மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன். மதுரை ரசிகர் உடன் சேர்ந்து படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிக திருப்தியான உணர்வை அளிக்கிறது" என்று கூறினார்.

நடிகர் சங்க கட்டடம் எப்போது கட்டி முடிக்கப்படும் எனும் கேள்விக்கு, ”நிச்சயமாக விரைவில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதற்கான பணியில் தீவிரமாக திரையுலக நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தின் பெயர் வைக்கப்படுமா என்பது குறித்தான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.

விஜய்-ஜெயம் ரவி

நடிகர் விஜய் அவரது கட்சிக்கு அழைத்தால் செல்வீர்களா எனும் கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, “என்னுடைய வாழ்வே சினிமா என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும்தான் இருக்கிறது. எனக்கு தெரிந்ததும் சினிமா மட்டும்தான். நடிகர் விஜய் அழைப்பு விடுத்தால் வீட்டுக்கு வேண்டுமென்றால் போய் வரலாம். ஆனால், அரசியல் வேண்டாம். அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டால் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது” என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!

x