`நான் ஒரு முட்டாளுங்க'- பிக் பாஸூக்கு கையெடுத்து குடும்பிட்ட பிரதீப் ஆண்டனி!


பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரம் பல விவாதங்களை கிளப்பியிருக்கும் நிலையில், பிரதீப் அதுகுறித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தகாத வார்த்தைகள் உபயோகிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற காரணங்களைச் சொல்லி கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இது முறையற்ற வெளியேற்றம் எனவும், மாயா-பூர்ணிமா கேங் வேண்டுமென்றே திட்டம் தீட்டி பிரதீப்பை வெளியேற்றி விட்டார்கள் எனவும் பிரதீப்புக்கு ஆதரவாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், ரசிகர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னும் சிலர் கமல்ஹாசனையும் திட்டி வந்தனர்.

மேலும், இது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் மத்தியிலும் கடுமையான விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தான், பிரதீப் இதுகுறித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ‘நான் பிக் பாஸை முடித்துவிட்டேன். அவர்களது வியாபாரத்திற்காக யூடியூபில் என்னைப் பற்றி கன்டென்ட் உருவாக்கி வெறுப்பை பரப்பி வருகிறார்கள். வாழட்டும்! நான் என்னுடைய கன்டென்ட்டை உருவாக்க விரும்புகிறேன். இதிலேயே சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஃப்ரீயா விடுங்க. வேலையைப் பார்ப்போம்’ என்று சொல்லி ‘நான் ஒரு முட்டாளுங்க’ பாடலின் கிளிம்ப்ஸையும் பகிர்ந்துள்ளார்.

x