[X] Close
 

ஆரவ் வந்தாச்சு; அடுத்து ஓவியா?


oviya

ஓவியா

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Sep, 2018 18:30 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 2 வீட்டுக்கு பிக்பாஸ் 1ல் இருந்த ஐந்து பேர் வந்திருந்தார்கள். இதனிடயே பிக்பாஸ் வின்னரான ஆரவ்வும் வந்துவிட்டார். அடுத்ததாக, ஓவியாவை களத்துல இறங்குங்கப்பா என்று ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார்கள் பிக்பாஸ் நேயர்கள் . 


பிக்பாஸ் 2 கிட்டத்தட்ட 85 நாட்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. ஓல்டு இஸ் கோல்டு என்பது போல, முதல் இம்பரஷன் பெஸ்ட் இம்பரஷன் என்பது மாதிரி, பிக்பாஸ் 1ஐச் சொல்லியே இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் நேயர்கள்.


அனந்த் வைத்தியநாதன், மமதி, ஷாரிக்,நித்யா, பொன்னம்பலம் தொடங்கி, வைஷ்ணவி, சென்றாயன் வரை வெளியேறிவிட்டார்கள். பாலாஜி, மும்தாஜ், ஜனனி, ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். பார்த்தால், பாலாஜிக்கு மனம் விட்டுப் பேசிக்கொள்ளக் கூட ஆண் துணை இல்லை.


போதாக்குறைக்கு, எல்லாரும் ஃபேக், எல்லாரும் நடிக்கிறாங்க, யாருமே இயல்பா இல்ல என்று எல்லோருமே சொல்லிக்கொண்டிருக்க, எல்லோரிடமும் ஒரு செல்ஃபிஷ் இருக்கிறது. அதேசமயம், மும்தாஜின் அன்பை, நடிப்பு என்று கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கவும் செய்கிறார்கள். ஆக, இப்படியும் அப்படியுமாக அல்லாடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் 2 வீடு.


கொஞ்சம் களை கட்டட்டும், கொஞ்சம் எனர்ஜி ஏறட்டும், இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டுவோம், டிஆர்பியை தூக்கி நிறுத்துவோம் என்கிற சிந்தனைகளுடன் பிக்பாஸ் 2 வீட்டுக்குள், பிக்பாஸ்1ல் இருந்தவர்களை உள்ளே இறக்கியிருக்கிறார்கள்.


வையாபுரி, கவிஞர் சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், சுஜா என்று வந்த ஐந்துபேரும் ஓரளவு பிக்பாஸ் வீட்டை, கலகலப்பாக்கி வருகிறார்கள். பிக்பாஸ் 1ல் இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள், அனுபவம் கொடுத்த உணர்வுகள், உணர்வுகளால் ஏற்பட்ட தெளிவு என்று எல்லோரும் இப்போது இருப்பவர்களிடம் அட்வைஸ் மழை பொழிந்தார்கள். 


இந்த நிலையில், பைக்கில் ஹெல்மெட் சகிதமாக, முகத்தை மறைத்துக்கொண்டு உள்ளே எண்ட்ரி ஆன ஆஜானுபாகுவான மனிதரைப் பார்த்து, யாராக இருக்கும் என்று  எல்லோரும் மண்டை காய்ந்துபோனார்கள்.


கூடவே பிக்பாஸ் 1 வீட்டில் இருந்த சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், சுஜா ஆகியோரால் கூட அவரை அனுமானிக்கமுடியவில்லை. ஆனால், ஜனனிதான் சட்டென்று சொன்னார்... வந்திருப்பது ஆரவ் என்று! (பெண் புத்தி ‘பின்’புத்தி. எவ்வளவு ஷார்ப்). 


வீடு இன்னும் குதூகலமானது. எல்லோரும் கொண்டாட்ட மூடுக்கு வந்துவிட, உற்சாகத்துக்கு குறைவின்றி, நிரம்பி வழிகிறது பிக்பாஸ் வீடு.
என்னதான் கடைசி நாள் வரை சினேகனும் ஆரவ்வும் இருந்தாலும், பிக்பாஸ் என்று டைட்டில் நேம் ஆரவ் தட்டிச் சென்றாலும் பிக்பாஸ் 1 வீட்டின், சூப்பர் ஸ்டார் ஓவியாதான். பாதியிலேயே சென்றாலும் நேயர்களின் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டவர் அவர்தான்! 
டிஆர்பிக்கு அடுத்த அஸ்திரமாக, பிக்பாஸ் 2 வீட்டுக்குள் ஓவியாவை இறக்கினால், இருக்கும் மிச்சசொச்ச வாரங்கள் இன்னும் சுவாரஸ்யம் ஏறும் என்று எதிர்பார்ப்புடன் சொல்கிறார்கள் நேயர்கள்.


நமக்கே தெரியும் போது, பிக்பாஸ் டீமுக்குத் தெரியாதா? விரைவில் ஓவியா வந்தாலும் ஆச்சரியமில்லை.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close