[X] Close

தலைவர் கலக்கிவிட்டார். குக்கூ...: 2.0 டீஸர் குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து


artists-reponse-for-2point0-teaser-release

  • kamadenu
  • Posted: 14 Sep, 2018 18:04 pm
  • அ+ அ-

‘2.0’ டீஸர் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தியத் திரையுலகில் அதிகப் பொருட்செலவில் தயாராகி வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராபிக்ஸ் பணிகள் திட்டமிட்டப்படி நிறைவு பெறாததால் வெளியீடு தாமதமானது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று இயக்குநர் ஷங்கர் அறிவித்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி ‘2.0’ டீஸர் வெளியானது. திரையுலகினர் மற்றும் ரஜினி ரசிகர்கள், படக்குழுவினரின் உழைப்பை பாராட்டி வருகிறார்கள். ‘2.0’ டீஸர் குறித்து திரையுலகினர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பு:

தயாரிப்பாளர் தாணு: ஹாலிவுட்க்கு நிகரான படம்.. இதுவரை வந்ததில்லை இம்மாதிரி டீஸர்.

கார்த்திக் சுப்பராஜ்: அடடா, அற்புதம். சிட்டியை பார்க்க தயாராகுங்கள். நமது சூப்பர் ஹீரோ. தலைவர் கலக்கிவிட்டார். குக்கூ... இயக்குநர் சங்கர் மற்றும் குழுவினருக்கு பெரிய வணக்கங்கள். 

அனிருத்: பிரமிக்க வைக்கிறது. தலைவரிடம் நெருப்பு தெறிக்கிறது. கிராண்ட் மாஸ்டர் ஷங்கரிடமிருந்து இதைப் பார்க்கும் நமக்கு பெருமையான தருணம் இது. 

தனஞ்ஜெயன்: நிஜமாகவே சர்வதேச அளவிலான ஹாலிவுட் பாணி தயாரிப்பு ஷங்கர் அவர்களே. ஒரு தமிழ் இயக்குநர் இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை எடுத்திருக்கிறார் என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமை. ரஜினிகாந்த் அவர்கள் நம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கப்போகிறார். அக்‌ஷய்குமாரும் அற்புதம். 2.0 டீஸர் அட்டகாசம். படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. 

விக்னேஷ் சிவன்: ஆசான் மீண்டும் வந்துவிட்டார். இந்த முறை நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாக. ஷங்கர் நமது பெருமை. இந்த அற்புதத்தைப் பார்க்கத் தயாராகிறேன் என்பதை விட அனுபவிக்கத் தயாராகிறேன். தலைவரின் கடைசி ஷாட். சூப்பர் ஸ்டார் மட்டுமே செய்யக்கூடிய அற்புதம்

அறிவழகன்: ஷங்கர் அவர்களின் வி.எஃப்.எக்ஸ் பார்வையுடனான பிரம்மாண்ட கனவு, நல்ல தரத்தில், வலுவான  திரைக்கதையோடு இங்கே முழுமையடையும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய்குமார் என்கிற மாயாஜால இணை மற்றதைப் பார்த்துக்கொள்ளும். 

சக்தி செளந்தரராஜன்: வாவ். இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தியிருக்கிறது 2.0 டீஸர். 

அஜய் ஞானமுத்து: கனவு போல இருக்கிறது. திரைக்கு நீங்கள் கொண்டு வரும் காட்சிகளைப் பார்த்து உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை வருகிறது. உங்களை பெற்றதற்கு இந்திய சினிமா ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது ஷங்கர் சார். 

நவீன்: சிட்டியை பார்க்க தயாராகுங்கள். டீஸரில் தலைவரின் கடைசி வசனம் வேற லெவல். ஷங்கர் அவர்களால் மட்டுமே இப்படியான பெரிய பட்ஜெட்டுக்கு தனது பிரம்மாண்டமான காட்சிகள் மூலம் ஈடு செய்ய முடியும்.

கஸ்தூரி: 2.0 டீஸர் - அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. முடிவில் அனைத்து எதிர்பார்ப்புகளும் உடைந்து டீஸர் இன்னும் எங்கோ உச்சத்துக்கு பறந்துவிட்டது. பிரம்மிக்க வைத்துவிட்டது. அடுத்த மார்வல் படத்தை இயக்கும் வாய்ப்பு ஷங்கர் அவர்களுக்குக் கிடைக்கலாம். ரஜினிகாந்த் கலக்கிவிட்டார். 

டிடி: என் தலைவரை பெரிய ஸ்க்ரீன்ல 3டில பாத்துட்டேன். அதி அற்புதம். ஷங்கர் சார். கலக்கிவிட்டீர்கள். ஒவ்வொரு நிமிட காத்திருப்புக்கும் மதிப்புள்ள டீஸர்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close