[X] Close

அது ஃபார்வர்டு மெசேஜாம் நெட்டிசன்களே!- சந்தோஷ் சிவனே சொல்லிட்டார்


santhosh-sivan-on-his-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 15:42 pm
  • அ+ அ-

காலையில் இருந்தே சந்தோஷ் சிவன் டீவீட் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திவர அவரது பக்கத்தில் அந்த ட்வீட்டை பார்த்தவுடனேயே சில நெட்டிசன்கள் கணித்திருந்ததுபோல் அதை டெலீட் செய்ததுடன் அது ஃபார்வர்டு மெச்ஜே என்றும் அவர் விளக்க ட்வீட் செய்திருக்கிறார்.

அரசியலானாலும் சரி சினிமாவானாலும் சரி பிரபலங்கள் சிலர் சில தருணங்களில் தங்கள் கருத்து சர்ச்சையாகும் போது அதை டெலீட் செய்வதையும் அது ஃபார்வார்டு எனக் கூறி தட்டிக் கழிப்பதும் நடைபெறுகிறது.

அந்த வரிசையில், சந்தோஷ் சிவனும் தற்போது தனது ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு அது ஃபார்வர்டு மெசேஜ் எனக் கூறியிருக்கிறார்.

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர்கள் குறித்து புகைப்பட வடிவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் ஒரு நாய்க்குட்டியின் இரு வெவ்வேறு முக பாவனைகள் கொண்ட புகைப்படங்களை மெர்ஜ் செய்து ஒரு ட்வீட்போட்டிருக்கிறார். அதில் பல் தெரியும்படி ஆவேசமாக இருக்கும் நாய்க்குட்டிக்கு மேலே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது தயாரிப்பாளர்கள் மனோபாவம் என்றும். மற்றொரு நாய்க்குட்டியின் மேல் ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது தயாரிப்பாளர்களின் முகம் இப்படி இருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.முன்னணி ஒளிப்பதிவாளரே இப்படி கூறியிருந்தது, பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களுடைய கடும் கண்டத்தை பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் மாலையில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதில் சந்தோஷ் சிவனுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்கவும் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது ட்வீட்டை சந்தோஷ் சிவன் டெலீட் செய்தார். தொடர்ச்சியாக இன்னொரு ட்வீட் பதிவு செய்த சந்தோஷ் சிவன், "அந்த ஆங்கில ட்வீட் ஒரு ஃபார்வர்டு மெசேஜ். அது சில மதிப்புமிகு தயாரிப்பாளர்களையும் காயப்படுத்தும் என்பதால் நான் அதை நீக்கிவிட்டேன். அதில் வேறு உள் அர்த்தம் ஏதுமில்லை" எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close