[X] Close

தயாரிப்பாளர்களை விமர்சித்த சந்தோஷ் சிவனுக்கு ஜேஎஸ்கே பதிலடி


jsk-slams-santosh-sivan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 14:02 pm
  • அ+ அ-

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளத்தை கொடுக்கும்போது மட்டும் தயாரிப்பாளர்கள் முகம் சுளிப்பதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பதிவு செய்த ட்வீட்டுக்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜேஎஸ்கே கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதில் ஒரு நாய்க்குட்டியின் இரு வெவ்வேறு முக பாவனைகள் கொண்ட புகைப்படங்களை மெர்ஜ் செய்து ஒரு ட்வீட்
போட்டிருக்கிறார். அதில் பல் தெரியும்படி ஆவேசமாக இருக்கும் நாய்க்குட்டிக்கு மேலே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது தயாரிப்பாளர்கள் மனோபாவம் என்றும். மற்றொரு நாய்க்குட்டியின் மேல் ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது தயாரிப்பாளர்களின் முகம் இப்படி இருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக ஜேஎஸ்கே தயாரிப்பு நிறுவனத்தின் சதீஷ் குமார், "கலையை நேசிக்க தெரியாத பணவெறி பிடித்த உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம். நீ யாரை சொல்கிறாய் உணக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா? இல்லை லிங்குசாமியையா? மன்னிப்பு கேள். இல்லையென்றால் உன்னை கலைத்தாய் உணரச்செய்யும்!" எனப் பதிவிட்டுள்ளார். இதில் விஷாலையும், லிங்குசாமியையும் டேக் செய்திருக்கிறார்.

நடுவல கொஞ்சம் பக்கத்த காணோம், தங்க மீன் கள். இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களைத் தயாரித்தவர். இவர் பல படங்களை விநியோகமும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close