[X] Close

முதல் நாளில் 550 தியேட்டர்களில் இருந்து 13.5 கோடி வசூல்: ‘சீமராஜா’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி


first-day-report-of-seemaraja

  • kamadenu
  • Posted: 14 Sep, 2018 13:01 pm
  • அ+ அ-

வெளியான முதல் நாளில், தமிழகத்தில் 550 திரையரங்குகளிலிருந்து, 13.5 கோடி வசூலாகி இருப்பதாக, ‘சீமராஜா’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சீமராஜா’. ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு படத்தை ரிலீஸ் செய்தார்கள். சிவகார்த்திகேயன் படம் என்பதால், பல்வேறு திரையரங்குகளில் 5 காட்சிகள் முதல் 6 காட்சிகளை வரைத் திரையிட்டார்கள். இதனால், முதல் நாள் வசூல் சாதனை புரியும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்நோக்கியிருந்தது.

தற்போது முதல் நாள் வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சிவகார்த்திகேயன் நிறைய  வித்தியாசமான வேடங்களில் நடிக்க  வேண்டும் என்ற நிலையைத் தாண்டி , அவரது ரசிகர்களுக்கு  பிடித்தமான ஒரு கலகலப்பான படம்தான்  ’சீமராஜா’. 

முதல் நாளே திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்தார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல்  சாதனையை இப்படம் முறியடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது. 550 திரையரங்குகளில்  இந்தப் படம் திரையிடப்பட்டு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.

’சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கும் படத்திலும், ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close