மீண்டும் மகாபாரதம்... படமாக எடுக்கிறார் இயக்குநர் லிங்குசாமி!


தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’

ராமாயணக் கதைகள் படமானதைப் போலவே, இப்போது மகாபாரதக் கதையும் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு படமாக இருக்கிறது. இந்த இதிகாசக் கதையை இயக்குநர் லிங்குசாமி படமாக இயக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லிங்குசாமி

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகள் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு ஏற்படுத்தாதவை. அவை நாடகமோ, சினிமாவோ எந்த வடிவில் வந்தாலும் ரசிகர்கள் அதை விரும்பி பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.

‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ கதைகள் சின்னத்திரையிலும் படங்களாகவும் வந்தது. அதிலும் குறிப்பாக, சமீபகாலத்தில் ‘ஆதிபுருஷ்’, ‘பிரம்மாஸ்திரா’, ‘ஹனுமன்’ என ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளியானது. கதையாக்கத்தில் இந்தப் படங்களில் சில அடிவாங்கினாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டானது.

லிங்குசாமி

இந்த வரிசையில் தற்போது ‘மகாபாரத’க் கதையும் மீண்டும் படமாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ‘அஞ்சான்’, விஷாலுடன் ‘சண்டக்கோழி2’, ராம் பொத்தினேனியுடன் ‘தி வாரியர்’ என லிங்குசாமி அடுத்தடுத்து எடுத்த படங்கள் அவ்வளவாக போகவில்லை.

ஆனால், இதிகாசக் கதைகள் வசூலில் ஏமாற்றது என்ற நம்பிக்கையில் தனது கம்பேக்கிற்காக இந்த மகாபாரத கதையை எடுக்கவுள்ளாராம் லிங்குசாமி. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், ஆகாஷ் முரளியுடன் ‘பையா2’ கதையையும் உருவாக்கும் விவாதத்திலும் இருக்கிறார் லிங்குசாமி.

இதையும் வாசிக்கலாமே...

x