நடிகை சமந்தா தான் கிரையோதெரபி எடுக்கும்படியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா மையோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வரக்கூடிய சமந்தா சினிமாவுக்கு ஆறுமாத காலம் பிரேக் எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் சிறிது காலம் சிகிச்சை எடுத்தவர் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். தன்னுடைய துணி பிசினஸ், இதர நிகழ்ச்சிகள், தீவிர உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வரக்கூடிய சமந்தா அவ்வபோது தன்னுடைய சிகிச்சை முறைகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமந்தா தற்போது கிரையோதெரபி சிகிச்சை எடுத்து வருவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, ‘குணமாகி வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். நீராவிக் குளியல் எடுப்பது போல இருக்கும் சமந்தாவின் இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!