[X] Close
 

நேற்று அ ஆ இ ஈ… இன்று பிக்பாஸில்?


snegan-janani

ஜனனி - சினேகன் - பிக்பாஸ்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 21:06 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 2 வீட்டில் பிக்பாஸ் 1ல் இருந்த அஞ்சு பேர் வந்து அலப்பறையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய நாளில், அ ஆ இ ஈ கற்றுக்கொடுத்தார் கவிஞர் சினேகன். இன்றைக்கு மும்தாஜுக்கு ஏதோ பாடம் நடத்தப் போகிறார் போல!

பிக்பாஸ்2 கிட்டத்தட்ட, 85 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில், பிக்பாஸ் 2 இன்னும் சூடு பிடிக்கவே இல்லை என்று பலரும் சொல்லி வருகிறார்கள். என்னதான் சொல்லுங்க, பிக்பாஸ் 1 மாதிரி பிக்பாஸ் 2 இல்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், டேனியல் வெளியே போனது ஒருபக்கமும் சென்றாயன் வெளியேறியது இன்னொரு பக்கமுமாக, பிக்பாஸ் வீட்டை களையிழக்கச் செய்துவிட்டதாகவே கருதுகிறார்கள்.

என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்தார்களோ என்னவோ… பிக்பாஸ் 2 வீட்டுக்குள் கடந்த திங்களன்று பிக்பாஸ்  1ல் இருந்த ஐந்துபேர் திடுதிப்பென்று வந்திறங்கினார்கள். கவிஞர் சினேகன், வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி ரகுராம், சுஜா என ஐந்து பேர் வந்திருக்கிறார்கள்.

ஏதோ வந்தார்கள்… சில நிமிடங்கள் இருந்துவிட்டு சென்றார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் டீம், அவர்கள் தங்குவதைக் கண்டு ஒருபக்கம் குஷியாகிவிட்டார்கள்.

நேற்றைய தினம் ஜனனி உடுத்தியிருந்த ஆடை முழுவதும் தமிழ் எழுத்துகள் அச்சிடப்பட்டிருந்தன. தமிழைப் பார்த்ததும் பொங்கியெழுந்த கவிஞர், அ ஆ இ ஈ சொல்லத் தொடங்கிவிட்டார். மேலும் ஜனனிக்கு பாலபாடத்தை ஆரம்பித்தார். அ சொல்லவும் ஆ சொல்லவும் இ சொல்லவும் ஈ சொல்லவும் என கற்றுக்கொடுத்தார்.

பிறகு அடுத்தகட்டமாக, ஜனனியை ஸ்லீப்பர் செல்லாகவே ஆக்கிக்கொண்டது பழைய பிக்பாஸ் டீம். சிலபல விஷயங்களிலெல்லாம் ஜனனியை வைத்துக்கொண்டு கேம் ஆடியது செம.

இந்த நிலையில், இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில், சினேகன் மளமளவென ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறார். கமலுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால் அவரிடம் பேசும்போது கூட, பலர் கால்மேல் கால் போட்டுப் பேசுவது தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கவில்லை என்றார் சினேகன்.

இங்கே வருவதற்கு முன்பு, எல்லாவற்றையும் செய்கிறோம் என ஒப்புக்கொண்டுதானே வந்திருக்கிறீர்கள். ஆனால் எதையும் செய்யாமல் தட்டிக்கழிக்கிறீர்கள் என்று சினேகன் சொல்ல, எல்லோரும் இறுகிப் போனார்கள்.

உங்களையெல்லாம் கமல் சார், திட்டுகிறார்தான். ஆனாலும் இந்தத் திரை மூடியதும் அவர் எவ்வளவு வருத்தப்படுகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா. மக்களிடம் நீங்கள் செய்த தவறுகளுக்காக அவர் எப்படியெல்லாம் எக்ஸ்க்யூஸ் கேட்கிறார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா என்று ஒரு ப்ரோமோ காட்டப்படுகிறது. இதில் மும்தாஜ் கதறியழுகிறார்.

இன்னொரு ப்ரோமோவிலும் மும்தாஜ் வெடித்து அழுகிறார். அதேசமயம் விளையாட்டில் விஜி கீழே விழ செம அடி. எல்லோரும் பதறுகிறார்கள். உள்ளே ஓடிப்போய் மருந்து எடுக்க விரைகிறார்கள். பிக்பாஸ்… டாக்டர் ப்ளீஸ் என கதறுகிறார்கள்.

பாப்போம்… என்ன நடக்குதுன்னு?

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close