[X] Close

அரவிந்த்சாமிக்கு சீக்கிரமே பணம் செட்டில் பண்ணுவேன்! சதுரங்கவேட்டை 2 மனோபாலா உறுதி


arvindsamy-manobala

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 20:36 pm
  • அ+ அ-

 

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருக்குங்கறது உண்மைதான். அந்தப் பணத்தைத் தந்துட்டுதான் சதுரங்கவேட்டை 2 படத்தை ரிலீஸ் பண்ணுவேன் என்று இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான மனோபாலா தெரிவித்துள்ளார்.

சதுரங்கவேட்டை படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார் இயக்குநர் மனோபாலா. இந்தப் படத்தின் மூலமாக வினோத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், அரவிந்த்சாமியை நாயகனாக்கி, சதுரங்கவேட்டை 2 படத்தை தயாரித்து வருகிறார் மனோபாலா. நடுவே, இந்தப் படத்துக்கான சம்பளப் பாக்கியைத் தந்தால்தான் பணியில் ஈடுபடுவேன் என அரவிந்த்சாமி சொன்னதுடன் வக்கீல் நோட்டீஸும் அனுப்பினார்.

இந்தப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்த சமயத்தில், படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா தெரிவித்ததாவது:

நடிகர் அரவிந்த்சாமிக்கு சம்பளம் பாக்கி இருப்பது உண்மைதான். அவருக்குத் தரவேண்டிய பணம் எவ்வளவு என்று அவருக்கேத் தெரியும். அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் சதுரங்கவேட்டை 2 படத்தை வெளியிடுவேன்.

ஆனால், என்னைப் பற்றி பலபேர், அரவிந்த்சாமியிடம் ஏதோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் சினிமாவில் மிகக் கொடுமையான விஷயம். நான் அப்படிப்பட்டவன் அல்ல. அதை அரவிந்த்சாமி விரைவில் தெரிந்துகொள்வார்.

தவிர, இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்குப் போனால் எல்லாம் சரிப்படாது. உட்கார்ந்து பேசித்தான் சரிசெய்யவேண்டும். அரவிந்த்சாமி மிகப்பெரிய மனிதர். அவர் என்னுடன் உட்கார்ந்து பேசுவதற்கு சம்மதிப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு சம்பளப் பணத்தைக் கொடுத்துவிடுவேன் என உத்தரவாதம் அளிக்கிறேன். என்ன… அந்தப் பணத்தை மொத்தமாகத் தருவேனா, அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பேனா என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும் எனக்கு.

அரவிந்த்சாமிக்கு சம்பளப் பணத்தைக் கொடுக்காமல் படத்தை வெளியிடமாட்டேன்.

இவ்வாறு மனோபாலா தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close