[X] Close

'சிக்ஸ்பேக்' சூரி: படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி


six-pack-soori-news

  • kamadenu
  • Posted: 12 Sep, 2018 18:19 pm
  • அ+ அ-

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து நடித்திருக்கிறார் சூரி.

முன்னணி நாயகர்கள் மட்டுமே ஒரு கதாபாத்திரத்துக்காக, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். ஆனால், காமெடி நடிகர்கள் யாருமே தங்களுடைய கதாபாத்திரத்துக்காக அப்படி செய்வதில்லை.

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘சீமராஜா’ படத்துக்காக காமெடி நடிகர் சூரி, சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 13) வெளியாகவுள்ளதால், சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “8 மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி செய்து, இந்த சிக்ஸ்பேக்கை கொண்டு வந்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘சீமராஜா’ படத்தில் வரும் அரசர் காலத்து காட்சிகளில் இந்த சிக்ஸ் பேக்குடன் சூரி வருவார் என்று தெரிகிறது. படக்குழுவினர் இக்காட்சியின் தன்மையை விளக்கியவுடனே, எவ்வித மறுப்புமின்றி சிக்ஸ் பேக் வைத்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார் சூரி. இதனை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிகவும் பாராட்டிப் பேசினார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் திரையுலகினர் பலரும் சூரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close