[X] Close

சிகரெட்டை பெருமையா விற்கும் நீங்கள் இ- சிகரெட்டை மட்டும் தடுப்பதேன்?- நடிகர் சித்தார்த்


his-is-hypocritical-counter-productive

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 15:40 pm
  • அ+ அ-

தமிழகத்தில் இ-சிகரெட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில் உயிரைக் கொல்லும் சிகரெட்டை பெருமையோடு வரி விதித்து விற்கும் நீங்கள் ஏன் இ- சிகரெட்டை மட்டும் தடை செய்கிறீர்கள் என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இ- சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனைக்கு தமிழகத்தில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள தமிழக அரசே. இ-சிகெரட்டை நீங்கள் தடை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிகரெட்டைத் துறக்க இதுதான் பலருக்கும் உதவியாக இருக்கிறது. உயிரைக் கொல்லும் சிகரெட்டை பெருமையோடு வரி விதித்து விற்கும் நீங்கள் ஏன் இ- சிகரெட்டை மட்டும் தடை செய்கிறீர்கள்? இது பலனற்றது பாசாங்குத்தனமானது. உச்ச நீதிமன்றம் இருக்கிறது" என சாடியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close