[X] Close
 

மிஸ்டு கால் கொடுங்க 2.0 ப்ரீமியர் டிக்கெட் ஃப்ரீயா பெறுங்க!- ஷங்கர்


give-a-missed-call-on-91-9099949466-to-book-your-free-ticket

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 15:09 pm
  • அ+ அ-

'2.0' படத்தின் டீஸ்ரை எதிர்நோக்கியுள்ள ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஜாக்போட் அறிவித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

'2.0' படத்தின் டீஸர் நாளை விநாயகர் சதுர்த்தியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஜாக்போட் அறிவித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "#2point0 டீஸர் வெளியாக இன்னும் ஒரே ஒரு நாளே இருக்கிறது. இதுதான் முதல் 3டி டீஸர். இதன் ப்ரீமியரை பிவிஆர், சத்யம் திரையரங்குகளில் பார்க்கலாம். +91 9099949466 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து டிக்கெட்டை இலவசமாக புக் செய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

'2.0' படத்தின் டீஸரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த படம் ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவில் முதன் முறையாக டீஸர் வெளியீட்டுக்கு திரையரங்குகள் லிஸ்ட் அடங்கிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது ‘2.0’ படக்குழு. நாளை (செப்.13) எத்தனை மணிக்கு ‘2.0’ டீஸர் யூ-டியூப் இணையத்தில் வெளியாகும் என்பதை இயக்குநர் ஷங்கர் இன்னும் அறிவிக்கவில்லை. 

அதற்குள்ளாகவே, ரஜினி ரசிகர்கள் ”இம்முறை நாம் யூ-டியூப்பில் பல ரெக்கார்டுகளை உடைக்க வேண்டும். ஆகையால் அதிலிருந்து டவுன்லோட் செய்து யாரும் ஷேர் செய்ய வேண்டாம்” என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close