[X] Close
 

படத்திலும் சரி நிஜத்திலும் சரி நான் அஜித் ரசிகன்: நாக சைத்தன்யா 


i-m-a-huge-fan-of-the-person-he-is-both-on-and-off-screen

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 14:41 pm
  • அ+ அ-

தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஒரு அஜித் ரசிகர் எனத் தெரிவித்திருக்கிறார். ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படம் வெளியாவதைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கேள்விக்கு பதிலளித்தார் நாக சைந்தன்யா.

அப்போது ரசிகர் ஒருவர் அஜித் புகைப்படத்துடன் "ப்ரோ.. எங்கள் கோலிவுட் அல்டிமேட் ஸ்டார் தல அஜித்குமார் குறித்து ஏதாவது சொல்லுங்களேன்" என்று கேள்வி கேட்டிருந்தார். #AskChay என்ற ஹேஷ்டேக் கீழ் பகிர்ந்திருந்தார்.

அதற்கு நாக சைத்தன்யா "படத்திலும் சரி நிஜத்திலும் சரி நான் அந்த மனிதரின் மிகப்பெரிய ரசிகன்" என்று பதிலிளித்திருக்கிறார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செப்டம்பர் 13-ம் தேதி ஒரே நாளில் 'சைலஜா ரெட்டி அல்லுடு' படத்துடன் மனைவி சமந்தா நடித்திருக்கும் 'யு-டர்ன்' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

[X] Close