[X] Close
 

’கன்னிப்பருவத்திலே’ விஜயகாந்த்? - பாக்யராஜ் சொன்ன ரகசியம்


bhagyaraj-vijayakanth

கன்னிப்பருவத்திலே - கே.பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசி

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 14:12 pm
  • அ+ அ-

கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷ் நடித்த கேரக்டரில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. நான் சிபாரிசு செய்தேன் என்று கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

கே.பாக்யராஜ் விழா ஒன்றில் பேசியதாவது:

கன்னிப்பருவத்திலே படத்துக்கான கதையை முடிவு செய்து காட்சிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது, எனக்கு அந்த ராஜேஷ் கதாபாத்திரத்துக்கு விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. கிராமத்து முகம், கட்டுமஸ்தான தேகம், அந்த கருஞ்சிவப்பு கண்கள், மாட்டை அடக்குபவருக்கான தோற்றம் என்று விஜயகாந்துதான் பிரமாதமாக இருக்கும் என்று நினைத்தேன். அதையொட்டியே வசனங்களும் எழுதினேன்.

ஒருமுறை தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்களிடம் விஜயகாந்தை அழைத்துச் சென்று, ‘இந்தக் கேரக்டருக்கு இவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவரும் சொல்றேன் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.

இப்படி, நான்கைந்து முறை, விஜயகாந்தை அழைத்துச் சென்று ராஜ்கண்ணு சாரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். கடைசியாக அப்போதுதான் அவர் சொன்னார்... ‘உங்க குருநாதர் (இயக்குநர் பி.வி.பாலகுரு) ஏற்கெனவே ஒருத்தரை செலக்ட் பண்ணிட்டாரு’ என்று! அவர்தான் நடிகர் ராஜேஷ்.

சரி, பாலகுரு சாரே முடிவு பண்ணி, சொல்லிட்டார்னா இனி நாம குறுக்கே புகுந்து ஏதாவது சொன்னா நல்லாருக்காதுன்னு முடிவு பண்ணி, அமைதியாக இருந்துவிட்டேன்.

ஆனாலும் விஜயகாந்த் பின்னர் எங்கோ உயரம் சென்று, மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார்.

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.

 

 

[X] Close