[X] Close
 

கமல் சார் உங்களைத் திட்டுறார்தான்... ஆனா எவ்ளோ ஃபீல் பண்றார் தெரியுமா?


kamal-snegan-biggboss

பிக்பாஸ் - மும்தாஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 12:03 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், கவிஞர் சினேகன் பேசும்போது, ‘கமல் சார் உங்களைத் திட்டுறார்தான். ஆனா இந்தத் திரை மூடிய பிறகு அவர் எவ்ளோ ஃபீல் பண்றார் தெரியுமா?’ என்று சொல்வது போலான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

என்னதான் சொன்னாலும், பிக்பாஸ் 1 போல பிக்பாஸ் 2 இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நேயர்கள். சமூகவலைதளங்களிலும் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்தோ என்னவோ... பிக்பாஸ் 1ல் இருந்த நடிகர் வையாபுரி, கவிஞர் சினேகன், காயத்ரி ரகுராம், சுஜா, ஆர்த்தி என ஐவரையும் உள்ளே பிக்பாஸ் 2ன் வீட்டுக்குள் இறக்கியிருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் முதலில் ஆச்சரியப்பட்டு, சந்தோஷப்பட்டுப் போனார்கள். ‘என்ன... இந்த அஞ்சுபேரும் வருவாங்க. ஒரு அரைமணி நேரம் இருந்து அட்வைஸாப் பொழிவாங்க. அப்புறம் கிளம்பிப் போயிருவாங்க’ என்றுதான் நினைத்தார்கள்.

ஆனால் திங்கட்கிழமை நிகழ்ச்சியின் போது வந்தவர்கள், அப்படியே தங்கிவிட்டார்கள். செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியிலும் அவர்கள் இருப்பது போல் காட்டப்பட்டது. ஆக, பிக்பாஸ் 1ல் இருந்த அந்த ஐந்துபேரும், இந்த வாரம் முழுக்கவே பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் போல் தெரிகிறது.

இந்த நிலையில், எல்லோரும் உட்கார்ந்திருக்க, கவிஞர் சினேகன் பேசுவது போலான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கவிஞர் சினேகன், ‘எல்லாப் போட்டிலயும் கலந்துக்கறோம், எல்லாமே செய்றோம்னு சொல்லித்தான் உள்ளே வந்திருக்கீங்க. ஆனா இங்கே நிறைய முரண்பாடுகள் நடந்திருக்கு.

அதேபோல கமல் சார் வரும்போது கூட, அவர்கிட்டப் பேசும்போது, பலபேர் கால் மேல கால் போட்டுக்கிட்டுப் பேசுறது, எனக்குத் தனிப்பட்ட முறைல நல்லதாப் படலை. கமல் சாருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.

உங்களைக் கமல் சார் திட்டுறாரே தவிர, இந்தத் திரை (அகம் டிவி) மூடினதுக்குப் பிறகு அவர் உங்களுக்காக எவ்ளோ ஃபீல் பண்றார்னு தெரியுமா உங்களுக்கு? தப்புச் செஞ்ச உங்களுக்காக, எக்ஸ்யூஸ் பண்ணிப் பேசுவார்’ என்று சொல்கிறார்.

அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாலாஜியின் முகம் இறுகுகிறது. சுஜா, ஆமாம் என்பது போல் தலையாட்டுகிறார். மும்தாஜ் நெகிழ்ந்து அழுதே விடுகிறார்.  

 

[X] Close