அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிட்ட பிரபலம்... `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை அதிர்ச்சி தகவல்!


பாண்டியன் ஸ்டோர்ஸ் பட்டாளம்

தன்னை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிட்டதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூலம் பிரபலமான நடிகை லாவண்யா அதிர்ச்சி தகவல் சொல்லி இருக்கிறார்.

நடிகை லாவண்யா

விஜய் டிவியின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை லாவண்யா. தற்போது, இந்த சீரியல் முடிவடைந்து இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், லாவண்யா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் , “காஸ்டிங் இயக்குநர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, என்னுடன் கான்டெக்ட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நடிகை லாவண்யா

இதுமட்டுமல்லாது, லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என சொல்லி அவர் 6 மாதம் ஒன்றாக வாழ்வோம், அதுக்கு மேல வேண்டாம் எனவும் சொன்னார். ’அந்த மாதிரி என்னுடன் இருந்தால் நீ பெரிய லெவலுக்கு போய்டுவ. மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படிதான் இருந்தார்கள். இப்போ செட்டில் ஆகிவிட்டனர்’ என்று அந்த நபர் கூறினார்.

இவரின் அந்த பேச்சுக்கு நான் எதுவும் பதில் அளிக்கவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். நான் அப்போது தான் வளர்ந்து வரும் காலகட்டம். அதனால் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை” என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

x