[X] Close
 

பிக்பாஸ் ஆங்கராக சிவகார்த்திகேயன்?


biggboss-sivakarthikeyan

ஆராதனாவுடன் சிவகார்த்திகேயன்

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Sep, 2018 21:33 pm
  • அ+ அ-

சீமராஜா படம் வருகிற 13ம் தேதி விநாயக சதுர்த்தி நாளில் வெளியாகிறது. இதையொட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் யு டியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.

இதில், சீமராஜா படம், அந்தப் படம் தந்த அனுபவங்கள், ஆராதனா பாடிய பாடல் வைரலான விஷயம், பாட்டு எழுதிய அனுபவம், அடுத்தடுத்த வளர்ச்சி குறித்த திட்டமிடல் என்று மனம் திறந்து பேசினார் சிவகார்த்திகேயன்.

அப்போது சிவகார்த்திகேயனிடம், நீங்கள் ஆங்கராக இருந்திருக்கிறீர்கள். ஆங்கராக இருந்துதான் சினிமாவுக்கு வந்திருக்கிறீர்கள். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆங்கராக உங்களைக் கேட்டால் செல்வீர்களா? என்று கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு சிவகார்த்திகேயன், ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆங்கராகப் பணிபுரியும்படி கேட்டால், நான் மாட்டேன் என்றுதான் சொல்லுவேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆங்கராக இருந்துவிட்டேன். அடுத்தகட்டமாக, சினிமாவுக்குள்ளேயும் வந்துவிட்டேன். இப்போது நடிப்பில் என்னை மேம்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இன்னும் நடிக்கக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதில் இன்னும் நல்லபேரெடுக்கவேண்டும். அதுபற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆங்கராக பண்ணமாட்டேன் என்று சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.

 

[X] Close