[X] Close
 

தன் பாலின உறவு குற்றமென்றால்.. கடவுளைக் குறை கூறுங்கள்!- மூடர்கூடம் நவீன்


actor-director-naveen

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 17:42 pm
  • அ+ அ-

தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்று பிரபலங்கள் பலரும் அன்றைய தினமே ட்வீட் போட்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மூடர்கூடம் திரைப்பட புகழ் இயக்குநர் நவீன் அண்மையில் தனது ட்விட்டரில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி ஒரு ட்வீட் பதிவு செய்திருக்கிறார்.

தன் பாலின உறவைக் கண்டித்து அந்த வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், தன்பாலின உறவை ஆதரித்தால் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் நவீன் தனது ட்விட்டரில், "தன்பாலின உறவாளர்களால் பெண்களுக்கு பாதிப்பு இல்லை. தன்பாலின உறவின் நாட்டம் கொண்ட ஆணை மணக்கும் பெண்தான் பாதிக்கப்படுவார். இரண்டு தனிநபர்களின் காதலால் ஒழுக்க நெறிகளுக்கும் மனித நெறிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. உங்களது இறைவன் தன் பாலின உறவாளரைப் படைக்கும்போதே தான் என்ன செய்கிறோம் என்பதைத் தெரிந்தே செய்திருப்பார். படைப்பாளியின் படைப்பை விமர்சிக்கவும் நிந்தனை செய்யவும் வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

[X] Close