நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷரா சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை, உதவி இயக்குநர் என பன்முகம் கொண்டவர் அக்ஷரா ஹாசன். இவர் தற்போது மும்பையில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், 2,354 சதுர அடியில் சுமார் 15.75 கோடி ரூபாய் மதிப்பில் மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள காரில் ஆடம்பர அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அபார்ட்மெண்ட் 1303, காரில் 16வது சாலையில் உள்ள 15 மாடி சொகுசு கோபுரத்தின் ஏக்தா வெர்வின் 13வது மாடியில் அமைந்துள்ளது. மேலும் 2,245 சதுர அடி மற்றும் இணைக்கப்பட்ட பால்கனியைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மூன்று கார் பார்க்கிங் இடங்கள் உள்ளன.
33 வயதாகக்கூடிய அக்ஷரா இந்த அபார்ட்மெண்ட்டை பாந்த்ரா ஜோடியிடம் இருந்து வாங்கியுள்ளார். இதற்கான பத்திரப் பதிவு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அன்று நடந்திருக்கிறது. ஸ்டாம்ப் டியூட்டியாக 94.50 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார் அக்ஷரா.
ஏக்தா வெர்வ் என்பது 3BHK, 4BHK மற்றும் 5BHK அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட ஏக்தா வேர்ல்ட் குழுமத்தின் சொகுசுத் திட்டமாகும். மஹாரேரா போர்ட்டலின் படி, 15 அடுக்கு கோபுரத்தில் 18 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. பெரும்பாலும் 5BHK மற்றும் ஒரு டூப்ளக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...