[X] Close
 

சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த பரிசு!


simbu-welcomes-sendrayan

  • kamadenu
  • Posted: 11 Sep, 2018 12:22 pm
  • அ+ அ-

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த சென்றாயனுக்கு நடிகர் சிம்பு புத்தகம் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

மூடர்கூடம், ரௌத்திரம், பொல்லாதவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சென்றாயன். 

விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். தன் வெள்ளந்தியான பேச்சு மற்றும் நடவடிக்கைகளின் மூலம் பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றார். கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத்தை சென்றாயன் சந்தித்தார். பிறகு அவர் மூலம் மஹத்தின் நண்பரான நடிகர் சிம்புவைச் சந்தித்துள்ளார்.

இதை மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ,” என்னுடைய நண்பன் சிம்பு என்னோடு பிக் பாஸ் போட்டியாளராக இருந்த சென்றாயனை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் சிம்பு சென்றாயனுக்கு திருமூலர் எழுதிய திருமந்திரம் என்னும் புத்தகத்தைப் பரிசளித்துள்ளார். மேலும் அந்தப் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close