பிரியங்கா சோப்ரா அனுமதி கேட்கவில்லை... சர்ச்சையை கிளப்பும் ஓஷோ உதவியாளர்!


மா ஆனந்த் ஷீலா-பிரியங்கா சோப்ரா

தன் பயோபிக்கை எடுக்க நடிகை பிரியங்கா சோப்ரா தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என ஓஷோவின் உதவியாளர் மா ஆனந்த் ஷீலா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஜனீஷ் என்ற இயற்பெயர் கொண்ட ஆன்மிக குரு ஓஷோவிடம் கடந்த 1981 முதல் 1985 வரை உதவியாளராக இருந்தவர் மா ஆனந்த் ஷீலா. கடந்த 2018ம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஓஷோ குறித்து வெளியான ‘வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ என்ற டாக்குமென்ட்ரி மூலமாக பரவலாக அறியப்பட்டார்.

இந்த நிலையில், இவரது பயோபிக் உருவாகிறது. இரண்டு வெவ்வேறு இயக்குநர்கள் இந்தப் படத்தை உருவாக்க நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் அலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர். இது குறித்து தற்போது மா ஆனந்த் ஷீலா பேசியிருப்பதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஓஷோ, மா ஆனந்த் ஷீலா

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், “என்னுடைய கதை படமாக உருவாகிறது. அதை அறிவிக்கும்போது அதில் நடிப்பது குறித்து நடிகை பிரியங்கா சோப்ராவோ அதன் இயக்குநர் பாரி லெவின்சனோ என்னிடம் அனுமதி கேட்கவில்லை. மாறாக, மீடியாதான் இதுகுறித்து என்னிடம் கேள்வி கேட்டு வருகிறது. ஆனால், என்னுடைய தேர்வு அலியாபட்தான். இளமைப் பருவத்தில் நான் இருந்தது போல சாயல் அவரிடம் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

மா ஆனந்த் ஷீலா, அலியா பட்

மேலும், தன் கதையில் பிரியங்கா சோப்ரா நடிக்க தனக்கு விருப்பமில்லை எனவும் தான் அவரை தேர்வு செய்யவில்லை எனவும் அவருக்கு நோட்டீஸூம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x