கமலின் நட்புக்காக ரஜினி செய்யும் காரியம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!


ரஜினி- கமல்

நடிகர் கமல்ஹாசனுடனான நட்புக்காக நடிகர் ரஜினி செய்ய இருக்கும் காரியத்தில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ’இந்தியன்2’ படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற நவம்பர் 7ம் தேதி அன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிறது. இதற்காக, இந்தப் படத்தில் இருந்து பல ஸ்பெஷல் விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுக்கத் தயாராகி விட்டது படக்குழு. முதலில் படத்தின் கிளிம்ப்ஸாக இந்தியன்2 அறிமுகம் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான அறிமுக கிளிம்ப்ஸை தமிழில் கமலுடனான இத்தனை வருட நட்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருக்கிறார் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. அதேபோல, இந்தியில் அமீர்கானும், தெலுங்கில் இயக்குநர் ராஜமெளலியும் வெளியிட இருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x