வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... மாஸாக பாங்காங் புறப்பட்ட நடிகர் சிம்பு!


சிலம்பரசன்

படம் கைவிடப்பட்டதா என நடிகர் சிம்புவின் ‘எஸ்டிஆர்48’ குறித்து பல வதந்திகள் வந்து கொண்டே இருந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிம்பு.

விமான நிலையத்தில் நடிகர் சிம்பு...

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு நடிகர் சிம்பு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்கிறார். அப்படி அவர் தேர்ந்தெடுத்த ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘பத்துதல’ படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தை அறிவித்தார். ஆனால், பட அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்தும், படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், படம் கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

விமான நிலையத்தில் நடிகர் சிம்பு...

ஆனால், இது வரலாற்று கதையுடன் தொடர்புடைய படம் என்பதால் அதற்கான முன் தயாரிப்புகள் பக்காவாக இருக்க வேண்டும் என்றே இந்த நீண்ட கால அவகாசம் என படக்குழு தெரிவித்தது.

தற்போது படம் கைவிடப்பட்டதா என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் பாங்காக் புறப்பட்டார். இதற்காக, நடிகர் சிலம்பரசன் இன்று அதிகாலை 1.40 மணியளவில் தாய் ஏர்லைன்ஸ் மூலம் பாங்காக் புறப்பட்டார். கருப்பு நிற டீஷர்ட்டில் கேப், மாஸ்க்கோடும் தலையில் நீண்ட முடியோடும் மாஸாக கிளம்பியுள்ளார் சிம்பு. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் சிம்பு இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x