`எங்களுக்கு ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது'- விக்ரமை பாராட்டும் பா.இரஞ்சித்


விக்ரம்- இரஞ்சித்

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் இரஞ்சித் மனம் திறந்து பேசியுள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தியும், அங்கு வேலை செய்தவர்களின் கதைகளைக் கொண்டும் வரலாறாக இந்தப் படம் உருவாகியுள்ளது என இயக்குநர் இரஞ்சித் தெரிவித்திருந்தார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது என்பதைப் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் இரஞ்சித்

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் பா. இரஞ்சித், படம் குறித்தும், நடிகர் விக்ரம் குறித்தும் பேசியிருப்பதாவது, “ஒரு படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்பது உண்மைதான். ஆனால், ஒரு கலைஞனாக நாம் காட்டும் ஈடுபாடும் முக்கியம். அந்த கடின உழைப்பையும் ஈடுபாட்டையும் விக்ரம் சாரிடம் படப்பிடிப்புத் தளத்தில் பார்த்தேன். ஒரு கதாபாத்திரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

‘தங்கலான்’ விக்ரம்

விலா எலும்பு உடைந்த பின்பும் கூட சண்டைக் காட்சிகளில் அவர் அத்தனை ஆர்வம் காட்டியது எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது. ‘தங்கலான்’ நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

x