[X] Close

தோழி யாஷிகாவிடமும் சண்டை: மீண்டும் தொடங்கியது ஐஸ்வர்யாவின் அராஜகம்


bigg-boss2-aishwarya-in-trouble

  • kamadenu
  • Posted: 08 Sep, 2018 13:51 pm
  • அ+ அ-

தோழி யாஷிகாவிடமும் சண்டையிட்டு, அவரது நட்பையும் இழந்து மீண்டும் ஐஸ்வர்யாவின் அராஜகப் போக்கு தொடர்வதால் சமூகவலைத்தளத்தில் கடும் கண்டங்கள் எழத்தொடங்கியுள்ளது.
பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலக்‌ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால், நாம் வெளியேற்றப்பட்டு விடக்கூடாது என்று ஒவ்வொருவரும் சாதுர்யமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
இந்த வாரம் யார் என்ற சூழலில், செப்டம்பர் 7-ம் தேதி ஒளிபரப்பானது. எப்போதுமே ஆங்கிலத்தில் பேசினால் சைரன் ஒலிக்கும். அப்போது யாராவது 5 பேர் போய் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது விதி. அவ்வாறு, நேற்று (செப்.7) நிகழ்ச்சியில்  காலையில் தூங்கி எழுந்த ஐஸ்வர்யாவும் மும்தாஜும் ஆங்கிலத்தில் பேசியதற்காக சைரன் ஒலிக்கப்படுகிறது. வழக்கம் போல் மும்தாஜ் எதுவுமே நடக்காதது போல கட்டிலிலேயே படுத்திருந்தார். 
நீச்சல் குளத்தில் குதிக்க யாரிடமும் உதவி கேட்க விரும்பாத ஐஸ்வர்யா தான் மட்டும் போய் இறங்கினார். பின்னர் யாஷிகாவும் சென்றாயனும் அவர்களாகவே சென்று நீச்சல் குலத்தில் இறங்கினார்கள். நம்மிடம் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லையே என்கிற கடுப்பில் ஜனனி, ரித்விகா, விஜி, பாலாஜி புலம்பிக் கொண்டிருந்தனர்.
நேரடியாகவே ஐஸ்வர்யாவிடம் “எங்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் உனக்காக குதித்திருப்போம்” என்று ஜனனியும் ரித்விகாவும் கூற, அதை கண்டுகொள்ளாத ஐஸ்வர்யா “எனக்கு தமிழ் வராது. நான் இங்கிலிஷில் தான் பேசப்போறேன்” என்று அடாவடியாக கூறிவிட்டு சென்றார்.
அதைப் பற்றி கேட்க யாஷிகாவிடமே கடுமையான முறையில் நடந்து கொண்டார். வீட்டில் உள்ள அனைவரும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளால் ஒதுக்கியபோது கூட யாஷிகா அவருக்கு ஆதரவாக இருந்தார். இப்போது தனது அகங்காரத்தின் மூலம் யாஷிகாவின் நட்பையும் இழந்துள்ளார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் செயல்பாடுகளுக்கு கடுமையாக கண்டனங்கள் சமூகவலைத்தளத்தில் எழுந்து வருகிறது. இதனால், இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் செயல்பாடுகளுக்கு கமல் என்ன்ன சொல்லப் போகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை!
 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close