'GOAT’ படப்பிடிப்பிலிருந்து வெளியான வீடியோ காட்சி... அதிர்ச்சியில் படக்குழு!


’தளபதி 68’ படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தற்போது நடித்து வரக்கூடிய ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ லீக் ஆகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகர் விஜய்

ரஜினி, விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அப்டேட் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள். அவர்களின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவதும் வழக்கம். அப்படித்தான் தற்போது நடிகர் விஜயின் ’GOAT’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகர் விஜய் நடித்துள்ள ஒரு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. கார் அருகில் நின்று கொண்டு நடிகர் விஜய் இரண்டு நடிகர்களுடன் பேசும்படியான காட்சிதான் அது.

வெங்கட்பிரபு இயக்கி வரக்கூடிய ’GOAT’ படத்தின் படப்பிடிப்புத் தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. ஒரு பக்கம் தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சியின் பெயரை அறிவித்த கையோடு நடிகர் விஜய் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார். ’GOAT’ படத்திற்கு அடுத்து ‘தளபதி 69’ படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களோடு அவர் சினிமாவை விட்டு விலகுகிறார். அரசியலில் முழு நேரமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகவே, விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x