இந்தப் படத்துல அது இல்ல... பார்த்திபன் பகிர்ந்த வீடியோ!


நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் 'இரவின் நிழல்' படத்திற்குப் பிறகு தான் இயக்கியுள்ள புதிய படம் குறித்தான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விருதுகளை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசை அமைக்கிறார். அதனை சமீபத்தில் தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இரவின் நிழல்

இந்தப் படம் குறித்து பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் இயக்கி வரும் ஒரு புதிய படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம். முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது. அந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன்; படத்தில் விஎஃப்எக்ஸ்(VFX) பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம். ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்கமுடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "அவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவ்வையார், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரம்மாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

x