சோஷியல் மீடியாவை விட்டு விலகும் லோகேஷ்... காரணம் ரஜினிதானாம்!


'தலைவர் 171’

’லியோ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் அடுத்தப் படத்திற்காக சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதாகத் தெரிவித்து இருக்கிறார்.

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘லியோ’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது. படத்திற்கு வந்துள்ள கலவையான விமர்சனங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். படம் வெளியான பிறகு அவர் படம் குறித்து அளித்துள்ளப் பேட்டியில் ரஜினிகாந்த்தை வைத்து அடுத்து இயக்க இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளுக்காக சோஷியல் மீடியாவை விட்டு விலகப் போவதாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்- லோகேஷ் கனகராஜ்

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் எல்சியூவில் இல்லாததால் இதில் ரஜினியை வித்தியாசமாக காட்ட உள்ளதாக கூறியுள்ளார் லோகேஷ். ரஜினியின் வில்லத்தனம் தனக்கு பிடிக்கும் என்பதால் அதனை இப்படத்தில் முழுமையாக பயன்படுத்த உள்ளதாக பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி அடுத்த ஆறு மாதத்திற்கு சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாக லோகேஷ் கூறினார். ஏனெனில், ‘தலைவர் 171’ படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதால் சோஷியல் மீடியா பக்கம் செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் லோகேஷ். அவர் இதற்கு முன்னர் லியோ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர் இதே போல் சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ்

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

x