பிக் பாஸில் அசல் கோளாறாக மாறிய நிக்சன்... வைரலாகும் வீடியோ!


நிக்சன், ஐஷூ

பிக் பாஸ்7 தமிழின் அடுத்த அசல் கோளாறாக நிக்சன் மாறி விட்டதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஐந்து பேர் உள்ளே நுழைந்தவுடன் போட்டி பரபரப்பாகியுள்ளது.. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த முதல் நாளிலேயே அவர்கள சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், மனமுடைந்த அர்ச்சனா இதற்காக விவாதம் செய்து நேற்று அழுதார். மேலும் நிக்சன் - ஐஷூக்கு இடையில் நடக்கும் காதல் டிராக்கையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

நிக்சன் மீது தனக்கு காதல் இல்லை என ஐஷூ சொன்னாலும், நிக்சனுடன் நெருக்கமாகவே பழகி வருகிறார். அதேபோல, நிக்சனும் ஐஷூவுடன் நெருக்கம் காட்டுகிறார். இருவரும் கண்ணாடிக்கு மத்தியில் முத்தம் கொடுப்பது போல பேசிக் கொண்ட காட்சிகளும் வைரலாகியது.

இந்த நிலையில், நாளுக்கு நாள் ஐஷூ - நிக்சன் இடையேயான நெருக்கம் அதிகமாகி வருகிறது. தற்போது அந்த ஜோடியின் மேலும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஐஷூவின் புருவம், கன்னத்தைத் தடவும் நிக்சன், உன் உதடு, மூக்கு என அனைத்து அழகாக இருப்பதாக வர்ணித்து பேசி இருக்கிறார்.

இதைப்பார்த்த, ‘நெட்டிசன்கள் இவன் என்ன கொஞ்சம் கொஞ்சமா அசல் கோளாறாக மாறிட்டு இருக்கான்’ என வறுத்தெடுத்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் அசல் கோளாறு அங்குள்ள பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷம் செய்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!

x