விஜயின் அரசியல் கட்சி... வடிவேலு கொடுத்த ஷாக் ரியாக்‌ஷன்!


வடிவேலு...

நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவ்வளவுதான் என நடிகர் வடிவேலு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் பதில் கூறியுள்ளார்.

வடிவேலு...

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அதன் பின் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் மேற்கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் அவரது தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் தனது தாய்க்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்ததாக தெரிவித்தார்.

வடிவேலு...

வடிவேலின் வருகையை கண்டு சுற்றி இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கிருந்த பக்தர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரிடம் நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அவ்வளவுதான்...இங்க வா' என அந்தக் கேள்வியைத் தவிர்க்கும்படி அவர் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

x