[X] Close

கலாய்ப்பதிகாரம் 02: கல்யாண வயசு பாடலின் பெண் வெர்ஷன்


kalayana-vayasu-female-version

அசல் - நகல்

  • kamadenu
  • Posted: 06 Sep, 2018 17:37 pm
  • அ+ அ-

'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண வயசு' பாடல் பட வெளியீட்டுக்கு முன்பே யூடியூபில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றப்பட்டு மிகப்பெரிய ஹிட்டானது. யோகிபாபு, நயன்தாராவை பின் தொடர்ந்து காதலிப்பது போன்ற இந்த வீடியோவில் அனிருத் இசை மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை இரண்டுமே பாடலின் பிரபலத்துக்கு முக்கியக் காரணமாய் இருந்தது. 

தொடர்ந்து இந்தப் பாடலின் பல கவர் வெர்ஷன்களை யூடியூப் கண்டது. இது எல்லா பிரபல பாடல்களுக்கும் வருவதுதான். அதேபோல பாடலின் மறு உருவாக்கத்தையும் சிலர் முயற்சித்தனர்.

அப்படி லைட் ஹவுஸ் என்கின்ற யூடியூப் சேனல் ஒன்று, கல்யாண வயசு பாடலின் பெண் வெர்ஷனை பதிவேற்றியுள்ளது. யோகிபாபு இடத்தில் ஒரு பெண்ணும், நயன்தாராவுக்கு பதிலாக ஒரு ஆணும் இருப்பது போல இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. கல்யாண வயசு பாடலின் காட்சிகளையும் சிறு மாறுதலோட கலாய்ப்பாக பயன்படுத்தியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

பூஜா வெங்கட் என்பவர் பாடியிருக்கும் இந்த பதிப்பில், வீடியோவில் நடித்திருப்பது சதிஷ் குமார் மற்றும் ரேவதி ஆகியோர். இந்தப் பாடலின் ஒளிப்பதிவு தரமும் சிறப்பாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் பதிவேற்றப்பட்ட இந்தப் பாடல் ஏற்கனவே 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இப்படி ஒரு வெர்ஷனை எதிர்பார்க்கவில்லை, இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைச்சா எவ்ளோ அதிர்ஷ்டம் தெரியுமா என பல பயனர்கள் பின்னூட்டத்தில் பாடலைப் பாராட்டியுள்ளனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close