மூன்று கிராமி விருதுகளைப் பெற்ற கையோடு பாடகர் கில்லர் மைக்கை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரைக் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுபவை கிராமி விருதுகள். நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா கிப்டோ டாட் காம் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஜாகிர் உசேன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சக்தி என்ற ஆல்பத்திற்கு கிராமி விருது கிடைத்துள்ளது. இந்த விஷயம் இந்திய இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த இசைக் கலைஞர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இந்த விழாவில் அட்லாண்டாவைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரான கில்லர் மைக்கிற்கு 3 கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற கையோடு அவர் அங்கிருந்த சிலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு வாக்குவாதம் செய்தார். இதனால், அவரை அங்கிருந்து போலீஸார் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், கைதான சில மணி நேரத்திலேயே கில்லர் மைக் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கில்லர் மைக் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...